/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்தம் பார்வையாளர் வீடுகளில் ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் திருத்தம் பார்வையாளர் வீடுகளில் ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்தம் பார்வையாளர் வீடுகளில் ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்தம் பார்வையாளர் வீடுகளில் ஆய்வு
ADDED : டிச 20, 2024 12:13 AM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை திருத்த பணியினை, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வீடு தோறும் சென்று ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த அக்.29ல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம், பெயர் நீக்கம், தொகுதி மற்றும் இடமாற்றம் போன்றவற்றுக்காக சிறப்பு முகாம் நடந்தது. சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பத்தினை தேர்தல் அலுவலர்கள் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சிறப்பு முறை திருத்தம் மேற்கொண்ட பின், வரும் ஜன.6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இப்பணியினை, மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அணில் மிஸ்ரம் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
பின், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்களுடன், மப்பேடு சமத்துவபுர பகுதியில் வீடுகள் தோறும் சென்று, சிறப்பு முகாம்களில் திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட படிவங்கள் மீது மேலாய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்தியபிரசாத், தாசில்தார்கள் சோமசுந்தரம், வாசுதேவன் உடனிருந்தனர்.