/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போஸ்டர் கிண்டி மருத்துவமனையில் நர்ஸை தாக்கிய வார்டுபாய் கைது
/
போஸ்டர் கிண்டி மருத்துவமனையில் நர்ஸை தாக்கிய வார்டுபாய் கைது
போஸ்டர் கிண்டி மருத்துவமனையில் நர்ஸை தாக்கிய வார்டுபாய் கைது
போஸ்டர் கிண்டி மருத்துவமனையில் நர்ஸை தாக்கிய வார்டுபாய் கைது
ADDED : மே 05, 2025 11:46 PM

கிண்டி, கிண்டி அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு, லட்சுமி, 55, என்ற செவிலியர் பணியில் இருந்தார்.
கிண்டி, செட்டி தோட்டத்தை சேர்ந்த வார்டுபாய் ஜான்சன், 27, என்பவர், பணி முடித்துவிட்டு, போதையில் மருத்துவமனையில் துாங்கிக்கொண்டிருந்தார்.
அவரை எழுப்பிய லட்சுமி, அங்கிருந்து வெளியேற வலியுறுத்தி, மேல் அதிகாரியிடம் புகார் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இதை கேட்ட ஜான்சன், லட்சுமியை தரக்குறைவாக பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவரின் செயலை மொபைல் போனில் படம் பிடிக்க முயன்ற போது, கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சக ஊழியர்கள் அவரை பிடித்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஜான்சன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கிண்டி போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.