/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அட்டப்பாளையம் வனப்பகுதியில் கழிவுகள் கொட்டி எரிப்பு
/
அட்டப்பாளையம் வனப்பகுதியில் கழிவுகள் கொட்டி எரிப்பு
அட்டப்பாளையம் வனப்பகுதியில் கழிவுகள் கொட்டி எரிப்பு
அட்டப்பாளையம் வனப்பகுதியில் கழிவுகள் கொட்டி எரிப்பு
ADDED : டிச 18, 2024 12:10 AM

சோழவரம்:சோழவரம் ஒன்றியத்தில், அட்டப்பாளையம் - கிருதலாபுரம் கிராமங்களுக்கு இடையேயான பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு, தைலம், புங்கம் உள்ளிட்ட ஏராளமான மரங்களும், முந்திரி காடுகளும் உள்ளன. அட்டப்பாளையம், கிருதலாபுரம், அல்லிமேடு ஆகிய கிராமங்களில் உள்ள கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாக இது இருக்கிறது.
இந்நிலையில், மேற்கண்ட வனப்பகுதியை சீரழிக்கும் வகையில். தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அவற்றின் கழிவுகளை இங்கு கொணடு வந்து கொட்டி குவிக்கின்றன. பிளாஸ்டிக், பைபர், ரப்பர், தர்மகோல் உள்ளிட்ட கழிவுகளை கொண்டு வந்து கொட்டி எரிக்கப்படுகின்றன.
இவை எரியும்போது, கரும்புகை வெளியேறுவதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், வனப்பகுதியை சுற்றியுற்ற கிராமங்களில் வசிக்கும் கிராமவாசிகளின் சுகாதாரம் பாதிக்கிறது.
மேலும், குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர், பயன்பாடு இல்லாத எண்ணெய் கழிவுகளும் இங்கு கொட்டப்படுகின்றன. இதனால் நிலப்பரப்பில் புற்கள், செடிகள் வளராமல் இருப்பதால், கால்நடைகளின் மேய்ச்சல் பாதிக்கிறது.
வனப்பகுதியில் கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதால், அங்குள்ள மரங்களின் வளர்ச்சியும் பாதிப்பதுடன், காட்டுத்தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
மட்காத குப்பை கழிவுகளால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது. வனப்பகுதியில் கழிவுகளை கொட்டி சீரழித்து, கிராமவாசிகளின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தி வருபவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.