/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரத்தில் வீணாகும் மின்கம்பங்கள்
/
சாலையோரத்தில் வீணாகும் மின்கம்பங்கள்
ADDED : பிப் 15, 2024 08:24 PM

பொன்னேரி:பொன்னேரி புதிய தேரடி சாலையில் உள்ள சேதமான இரும்பு மற்றும் சிமென்ட் மின்கம்பங்களை மாற்றுவதற்காக, கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன், புதிய சிமென்ட் மின்கம்பங்கள் கொண்டு வரப்பட்டன.
இவை, இதுவரை பயன்படுத்தப்படாமல் அதே சாலையின் ஓரத்தில் வீணாகி வருகிறது. லாரி, பேருந்து உள்ளிட்டவை, எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக சாலையோரம் செல்லும்போது, இவற்றின் மீது ஏறிச் செல்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கும் இவை இடையூறாக இருக்கின்றன.
பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்றுவதற்கு புதிய மின்கம்பம் இல்லாமல் காத்திருக்கும் நிலையில், தேரடி சாலையில் பயன்பாடின்றி வீணாகி வருகின்றன.
சேதம் அடைந்த மின்கம்பங்களுக்கு மாற்றாக பயன்படுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.