/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிக்கு செல்லும் சாலையில் கழிவுகள் மாணவர்கள் சுகாதாரம் கேள்விக்குறி
/
பள்ளிக்கு செல்லும் சாலையில் கழிவுகள் மாணவர்கள் சுகாதாரம் கேள்விக்குறி
பள்ளிக்கு செல்லும் சாலையில் கழிவுகள் மாணவர்கள் சுகாதாரம் கேள்விக்குறி
பள்ளிக்கு செல்லும் சாலையில் கழிவுகள் மாணவர்கள் சுகாதாரம் கேள்விக்குறி
ADDED : ஜூலை 16, 2025 01:51 AM

திருப்பந்தியூர்:திருப்பந்தியூர் ஊராட்சியில், அரசு பள்ளி அருகே மாட்டுச்சாணம், கழிவுநீர் தேங்குவதால், மாணவ - மாணவியரின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
திருப்பந்தியூர் பகுதியில் அரசு பள்ளிக்குச் செல்லும் சாலையில் மாட்டுச்சாணம், கழிவுநீர் தேங்குவதால், மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்பந்தியூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
மேலும் உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள தொடக்கப் பள்ளியிலும், 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியைச் சுற்றியுள்ள வீடுகளில் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர்.
இதனால், பள்ளிக்கு வரும் சாலை முழுதும் மாட்டுச் சாணங்களும், குப்பையும் நிறைந்து காணப்படுகின்றன.
இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் மாணவ - மாணவியர் சிரமப்படுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும், மாணவ - மாணவியரின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதால், மாவட்ட நிர்வாகம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.