/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் கழிவுநீர் சேகரிப்பு வாகனம்
/
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் கழிவுநீர் சேகரிப்பு வாகனம்
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் கழிவுநீர் சேகரிப்பு வாகனம்
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் கழிவுநீர் சேகரிப்பு வாகனம்
ADDED : பிப் 17, 2025 11:15 PM

பொன்னேரி, பொன்னேரி நகராட்சியில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 45 லட்சம் ரூபாய் செலவில், நான்கு மாதங்களுக்கு முன், 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சேகரிப்பு வாகனம் வாங்கப்பட்டது.
பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறைவு பெறும்வரை, நகராட்சியினர் பயன்பெறும் வகையில், இந்த கழிவுநீர் வாகனம் வாங்கப்பட்டது.
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து சேகரிக்ப்படும் கழிவுநீரை, திருவள்ளூர் நகராட்சியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
இதற்காக, குடியிருப்புகளுக்கு லோடு ஒன்றிற்கு, 2,000 ரூபாயும், வணிக நிறுவனங்களுக்கு லோடு ஒன்றிற்கு, 3,000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது,
இந்த வாகனத்தை இயக்க, ஓட்டுநர், கழிவுநீர் அகற்ற பயிற்சி பெற்ற பணியாளர் ஒருவர், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்திக் கொள்ள,ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம், நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கழிவுநீர் அகற்றும் வாகனம் இதுவரை பயனுக்கு கொண்டு வரப்படாமல், நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், அதற்காக செலவிட்ட நிதி வீணாகி வருகிறது.
நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீர் அகற்றும் வாகனத்தை பயனுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

