/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓடைக்கால்வாயில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையால் நீர் செல்வதில் சிக்கல்
/
ஓடைக்கால்வாயில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையால் நீர் செல்வதில் சிக்கல்
ஓடைக்கால்வாயில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையால் நீர் செல்வதில் சிக்கல்
ஓடைக்கால்வாயில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையால் நீர் செல்வதில் சிக்கல்
ADDED : பிப் 02, 2025 12:28 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, புதுப்பேடு, கொரஞ்சூர் ரெட்டிபாளையம், தமிழ்கொரஞ்சூர் வழியாக மவுத்தம்பேடு ஏரிக்கும், அங்கிருந்து பகிங்ஹாம் கால்வாய்க்கும் செல்லும் ஓடைக்கால்வாய் முழுதும் பராமரிப்பு இன்றி கிடக்கிறது.
கால்வாய் கரைகளில் முட்செடிகள் வளர்ந்தும், தேங்கிய தண்ணீரில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்தும் உள்ளன. மேலும், கோரைப்புற்களில் கால்வாய் மறைந்து இருக்கிறது.
மேற்கண்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பால் ஆழ்துளை கிணறுகள் வாயிலாக கிடைக்கும் தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில், கொசஸ்தலை ஆற்றில் இருந்தும், டிராக்டர்கள் வாயிலாகவும் தண்ணீர் கொண்டு வந்து குடியிருப்புகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
இது கிராமவாசிகளுக்கு போதுமானதாக இல்லாமல் பற்றாக்குறை நிலவுகிறது. கிராமவாசிகள் துணி துவைக்க, குளிக்க ஓடைகால்வாயில் தேங்கும் தண்ணீரை பயன்படுத்திக் கொள்வர். தற்போது, கிராமவாசிகளின் தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
கால்வாய் பராமரிப்பு இன்றி இருப்பதால், மவுத்தம்பேடு ஏரி மற்றும் பகிங்ஹாம் கால்வாய்க்கு தண்ணீர் சீராக பயணிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஓடைக்கால்வாயில் வளர்ந்து இருக்கும் ஆகாயத்தாமரை, செடிகளை அகற்றி துார்வாரி, துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.