/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.34 கோடியில் அமைத்த சுத்திகரிப்பு குடிநீர் மையங்கள் வீணடிப்பு!400 இடங்களில் இழுத்து மூடியதால் மக்கள் அதிருப்தி

ADDED : செப் 28, 2025 01:44 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், தலா 8 லட்சம் ரூபாய் மதிப்பில், 2018 - 19ம் ஆண்டு, 14 ஒன்றியங்களில் அமைக்கப்பட்ட 400 சுத்திகரிப்பு குடிநீர் மையங்கள் பயன்பாடின்றி வீணாகியுள்ளது. அதிகாரிகளின் திட்டமிடல் இல்லாததால், 33.60 கோடி ரூபாய் வீணாகியுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சுத்தமான குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்காக, 30 ரூபாய் கொடுத்து, 20 லிட்டர் கேன் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 2018 - 19ம் ஆண்டு ஊரக வளர்ச்சித்துறை சார்பில், தலா 8 - 10 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒன்றியத்திற்கு 30 என, மொத்தம் 14 ஒன்றியங்களில், 420 சுத்திகரிப்பு குடிநீர் மையங்கள், 33.60 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டன.
இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரை, அந்தந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, போதிய பராமரிப்பில்லாததால், 90 சதவீத சுத்திகரிப்பு குடிநீர் மையங்கள் பயன்பாடின்றி வீணாகியுள்ளன.
மேலும், சில ஊராட்சிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பெயரளவிற்கு அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு மையங்கள், 'குடி'மகன்கள் மது அருந்தும் பகுதியாக மாறியுள்ளன.
இதற்கு அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சில ஊராட்சிகளில் ஆண்டுக்கு ஒருமுறை பெயரளவிற்கு பராமரிப்பு பணி மேற்கொண்டும், பயன்பாட்டிற்கு வராமல் வீணாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, ஊராட்சி பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சுத்திகரிப்பு குடிநீர் மையங்களை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் மையங்களை ஆய்வு செய்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். - ஊரக வளர்ச்சி துறை அதிகாரி, திருவள்ளூர்.