/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முடங்கி கிடக்கும் குடிநீர் சுத்திரிகப்பு நிலையங்கள்
/
முடங்கி கிடக்கும் குடிநீர் சுத்திரிகப்பு நிலையங்கள்
முடங்கி கிடக்கும் குடிநீர் சுத்திரிகப்பு நிலையங்கள்
முடங்கி கிடக்கும் குடிநீர் சுத்திரிகப்பு நிலையங்கள்
ADDED : டிச 08, 2024 02:39 AM

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கிடபுரம் பகுதியில், தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் செலவில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
கட்டடம் மற்றும் சுத்திகரிப்பிற்கான உபகரணங்கள் ஆகியவை பொருத்தப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது. இதற்கான அனைத்து கட்டமைப்பு பணிகளும் முடிந்து, மூன்று மாதங்கள் ஆன நிலையில், இதுவரை பயனுக்கு கொண்டு வரப்படாமல் திட்டம் முடங்கி கிடக்கிறது.
திருவேங்கிடபுரம் பகுதியில் நிலத்தடிநீரில் உவர்ப்புத்தன்மை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான வீடுகளில், குடிநீர் கேன்களை வாங்கியே பயன்படுத்துகின்றனர். இங்கு, இரண்டு தனியார் குடிநீர் ஆலைகள் செயல்படுகின்றன.
தண்ணீர் தேவை அதிகமாக இருப்பதால், இங்கு சுத்திகரிக்கப்படும் குடிநீரின் தரம் கேள்விக்குறியாகவே இருக்கிறது. குடியிருப்புவாசிகளின் நீண்டநாள் கோரிக்கையின் பயனாக மேற்கண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதன் வாயிலாக மற்ற பகுதிகளில் உள்ளதுபோல், ஒரு கேன் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும். ஆனால், பயனுக்கு கொண்டு வருவதில், ஒன்றிய நிர்வாகம் மெத்தனம் காட்டுகிறது.
இதே போன்று, கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார், கொண்டஞ்சேரி, மப்பேடு, வெங்கத்துார், நரசிங்கபுரம் ஊராட்சிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் சுத்திகரிப்பு குடிநீர் நிலையங்கள் ஒவ்வொன்றும், 8 -10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டன.
இவற்றிற்கு திறப்பு விழா நடந்து, நான்கு ஆண்டுகளுக்கு ஆன நிலையில், முறையான பயன்பாடு இல்லாமல், கட்டமைப்புகள் வீணாகி வருகின்றன.
ஒன்றிய அதிகாரிகள் முறையான ஆய்வு செய்யாமல் சுத்திகரிப்பு குடிநீர் நிலையங்களை அமைத்தே காரணம் என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் வீணாகி வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உடனடியாக பயனுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.