/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைவிட்டு 5 நாட்களாகியும் கும்மிடி சாலையில் வடியாத நீர்
/
மழைவிட்டு 5 நாட்களாகியும் கும்மிடி சாலையில் வடியாத நீர்
மழைவிட்டு 5 நாட்களாகியும் கும்மிடி சாலையில் வடியாத நீர்
மழைவிட்டு 5 நாட்களாகியும் கும்மிடி சாலையில் வடியாத நீர்
ADDED : டிச 17, 2024 12:47 AM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி, கன்னியம்மன் கோவில் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் உள்ளது. அதன் கீழ் உள்ள இணைப்பு சாலையில், வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் உள்ளது.
வாகன ஓட்டிகள் உரிமம், வாகன தகுதி சான்று, புதிய வாகன பதிவு செய்ய உள்ளிட்ட வேலைக்காக, தினமும், நுாற்றுக்கணக்கானவர்கள் அந்த இணைப்பு சாலை வழியாக வந்து செல்கின்றனர்.
சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையின் போது, அந்த இணைப்பு சாலையில், குளம் போல மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிந்து செல்லும் வசதி அங்கு இல்லாததால், மழை நின்று ஐந்து நாட்களாகியும், தற்போது வரை குளம் போல மழைநீர் தேங்கி நிற்கிறது.
பல நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரால் சுகாதாரம் பாதித்ததுடன், துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் செல்கின்றனர்.
உடனடியாக அந்த இணைப்பு சாலையில் மழைநீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

