/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுருட்டப்பள்ளி அணையிலிருந்து 15 ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து
/
சுருட்டப்பள்ளி அணையிலிருந்து 15 ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து
சுருட்டப்பள்ளி அணையிலிருந்து 15 ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து
சுருட்டப்பள்ளி அணையிலிருந்து 15 ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து
ADDED : டிச 05, 2024 11:31 PM

ஊத்துக்கோட்டை
தமிழக - ஆந்திர எல்லையில், சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது அணைக்கட்டு. இங்கிருந்து ஊத்துக்கோட்டை, பேரண்டூர், லட்சிவாக்கம், பாலவாக்கம், முக்கரம்பாக்கம் வரை, 15ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில், 'பெஞ்சல்' புயுல் காரணமாக பெய்த பலத்த மழை மற்றும் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் ஆகியவற்றால், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் உள்ள மதகுகள் திறக்கப்பட்டு, வரத்து கால்வாய்வாயிலாக ஊத்துக்கோட்டை ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.
ஊத்துக்கோட்டை ஏரி, 90 சதவீதம் நிறைந்த நிலையில், கலங்கல் வாயிலாக, பேரண்டூர் ஏரிக்கு தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. மீதமுள்ள, 13 ஏரிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.