/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழாய் உடைந்து குடிநீர் வீண் அதிகாரிகள் அலட்சியம் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் அலட்சியம்

ADDED : ஜூன் 16, 2025 02:10 AM

பொன்னேரி:கிராமங்களுக்கு குடிநீர் செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, நாள் முழுதும் தண்ணீர் வீணாகி வருகிறது.
பொன்னேரி அடுத்த சின்னமனோபுரம், பெரியமனோபுரம், ரெட்டிப்பாளையம், அத்தமாஞ்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருக்கிறது.
இதனால், இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக, பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியில், 50க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து, கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.
மேற்கண்ட திட்டத்திற்காக, பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு, அவற்றின் வழியாக கிராமங்களுக்கு குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. இந்த குழாய்கள் ஆங்காங்கே சேதமடைந்து கிடக்கின்றன.
அதிக சுமையுடன் செல்லும் கனரக வாகனங்களால், குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி வருகிறது.
இந்த உடைப்புகளை சரிசெய்வதில், ஒன்றிய நிர்வாகம் மற்றும் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், நாள் முழுதும் குழாய் உடைப்புகள் வழியாக குடிநீர் வெளியேறி, சாலைகளில் பாய்ந்தோடுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.