/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் தொட்டியின் வேலி மாற்றி அமைப்பு
/
குடிநீர் தொட்டியின் வேலி மாற்றி அமைப்பு
ADDED : ஜூலை 07, 2025 11:18 PM

திருவாலங்காடு,
குடிநீர் டேங்குக்கு ஏணியை விட்டு வேலி அமைந்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். என் நம் நாளிதழ் செய்தி வெளியானதை அடுத்து மாற்றி சரியாக அமைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் முழுதும் கடந்த டிசம்பர் மாதம் முதல் குடிநீர் தொட்டி மீது ஏற முடியாதபடி வேலி அமைக்கப்பட்டது. அதன்படி திருவாலங்காடு ஒன்றியம் ஜாகீர் மங்கலம் ஊராட்சி ராஜபத்மாபுரம் கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் தொட்டிக்கு 15வது நிதிக்குழு மான்யத்தில் 39,500 ரூபாய் மதிப்பில் வேலி அமைக்கப்பட்டது.
இதில் குடிநீர் தொட்டி மீது ஏறும் வழியாக உள்ள ஏணியை தவிர்த்து குடிநீர் டேங்கை சுற்றி மட்டும் வேலி கண்துடைப்பாக அமைக்கப்பட்டுள்ளது. என் நம் நாளிதழில் கடந்த 5ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து திருவாலங்காடு ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் வேலியை மாற்றி ஏணியை இணைத்தப்படி மாற்றியமைத்தனர்.