/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி
/
இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி
ADDED : ஜன 23, 2025 01:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மாநெல்லுார் ஊராட்சிக்கு உட்பட்டது காந்தி நகர். இந்த தெருவில் உள்ள நுாலகம் அருகில், 1990ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தற்போது உறுதியிழந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே வீடுகள், நுாலகம், ரேசன் கடை, அங்கன்வாடி மையம் ஆகியவை உள்ளன.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்தால், உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. அதற்குள் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றி, புதிதாக கட்டித்தர வேண்டும்.
- எஸ். கண்ணுசாமி,
மாதர்பாக்கம்.