/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
களை கட்டுகிறது தர்பூசணி விற்பனை
/
களை கட்டுகிறது தர்பூசணி விற்பனை
ADDED : ஏப் 26, 2025 02:11 AM

ஆர்.கே.பேட்டை:'கோடை காலத்தில் மட்டும் அமோகமாக விற்பனை செய்யப்படும் தர்பூசணி, சமீபத்தில் பெரும் சரிவை எதிர்கொண்டது.
ஒரு கிலோ தர்பூசணி, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், திடீரென ஒரு கிலோ 10 ரூபாய் என்ற அளவிற்கு சரிவை சந்தித்தது.
இதனால், தர்பூசணி பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனை அடைந்தனர். இயற்கையாக விளைவிக்கப்படும் தர்பூசணிக்கு உரிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
தர்பூசணியின் உண்மைத்தன்மை மற்றும் அதன் மதிப்பை உணர்ந்த பகுதிவாசிகள் தற்போது ஆர்வத்துடன் தர்பூசணியை வாங்கி சுவைத்து வருகின்றனர்.
இதனால் விற்பனை மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில் ஒரு கிலோ தர்பூசணி, 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.