/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீனாவில் இருந்து கரும்பு அறுவடை மெஷினை கொண்டுவர ஆலோசிக்கிறோம்: அமைச்சர் ராஜேந்திரன்
/
சீனாவில் இருந்து கரும்பு அறுவடை மெஷினை கொண்டுவர ஆலோசிக்கிறோம்: அமைச்சர் ராஜேந்திரன்
சீனாவில் இருந்து கரும்பு அறுவடை மெஷினை கொண்டுவர ஆலோசிக்கிறோம்: அமைச்சர் ராஜேந்திரன்
சீனாவில் இருந்து கரும்பு அறுவடை மெஷினை கொண்டுவர ஆலோசிக்கிறோம்: அமைச்சர் ராஜேந்திரன்
ADDED : டிச 12, 2024 12:44 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. 40 ஆண்டுகள் பழமையான இந்த ஆலைக்கு, அரக்கோணம், திருத்தணி, பள்ளிப்பட்டு உட்பட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப்படுகிறது.
நடப்பாண்டிற்கான கரும்பு அரவை, 2 லட்சம் டன்னாக நிர்ணயித்து அரவை நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று, சுற்றுலா மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆலையில் ஆய்வு செய்தார். ஆலை ஊழியர்கள், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கரும்பு விவசாயிகள் கூறியதாவது:
கரும்பு ஆலை அரவை பருவத்தில் 140 நாட்கள் இயங்க வேண்டும் இயந்திர கோளாறால் 40 நாட்கள் அரவை நிறுத்தப்படுகிறது. எனவே ஆலையை மேம்படுத்த வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்க வேண்டும்.
காட்டுப்பன்றி தொல்லை அதிகம் உள்ளதால் கரும்பை சேதப்படுத்துகிறது. அதை தடுக்க நடவடிக்கை அவசியம். ஆலையில் ஒரு நாளைக்கு 5,000 டன் கரும்பு அரைப்பது அவசியம். சுற்றுச்சுவர் இல்லாததால் ஆலை தளவாட பொருட்கள் திருடப்படுகிறது. அதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது:
கரும்பு ஆலையை மேம்படுத்த 130 கோடி ரூபாய் தேவை அதற்கான முன்னெடுப்பு நடந்து வருகிறது. கரும்பு அறுவடை செய்ய, சீனாவில் இருந்து மெஷினை கொண்டுவர ஆலோசனை செய்யப்படுகிறது.
கரும்பு விளைச்சலை அதிகரித்து, லாபகரமாக இயக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் அரசு முதன்மை செயலர் அபூர்வா, சர்க்கரைத் துறை இயக்குனர் அன்பழகன், எம்.எல்.எ.க்கள் - திருவள்ளூர் ராஜேந்திரன், திருத்தணி சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.