/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் ஒப்பந்த பணியாளருக்கு அழைப்பு
/
'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் ஒப்பந்த பணியாளருக்கு அழைப்பு
'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் ஒப்பந்த பணியாளருக்கு அழைப்பு
'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் ஒப்பந்த பணியாளருக்கு அழைப்பு
ADDED : நவ 30, 2024 02:20 AM
கடம்பத்துார்,:திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்துார், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம் ஆகிய நான்கு வட்டாரங்களில் உள்ள 198 ஊராட்சிகளில், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் தொழில் நிதி வல்லுனர் என்ற ஒப்பந்த பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஊரக பகுதிகளில் தனிநபர் மற்றும் குழு தொழில் முனைவுகளை ஏற்படுத்துதல், நிறுவனங்களுக்கு தேவையான நிதி இணைப்பை ஏற்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி நீடித்த நிலையான மேம்பாட்டை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இதற்காக, 30 சதவீத மானியத்துடன் கூடிய இணை மானிய திட்டம் செயல்படுத்தி, புதிய தொழில் மற்றும் தொழில் விரிவாக்கம் தொடர்பாக பயனாளிகள் கண்டறிந்து, வங்கிகளின் மூலம் கடனுதவி போன்ற பணிகளை மேற்கொள்ள தொழில் நிதி வல்லுனர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
வங்கி தொடர்பாக, முன் அனுபவம் உள்ள ஓய்வு பெற்ற அல்லது விருப்ப ஓய்வு பெற்ற முதல்நிலை வங்கி அலுவலர்களாக பணிபுரிந்தவர்கள், இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள், 'மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், எண் 1/184 ஜெயா நகர், திருவள்ளூர்' என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது tvl.tnrtp@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சுய விபரங்களை அனுப்ப வேண்டும்.
மேலும், 94442 06658 மொபைல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

