/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வானிலை எச்சரிக்கை பழவேற்காடில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தவிர்ப்பு

ADDED : நவ 24, 2024 01:24 AM

பழவேற்காடு:தென்கிழக்கு வங்ககடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வங்ககடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பழவேற்காடு கடற்கரை பகுதிகளில், கடல் சீற்றமாக காணப்படுகிறது.
இதனால் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை.
மீனவர்கள் மீன்பிடி தொழிலை தவிர்த்து உள்ளதால், படகுகள் கரையோரங்களில் ஓய்வெடுக்கின்றன. மீனவர்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். சிலர் வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஏரியில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களே மீன் அங்காடியில் விற்பனையாகி வருகின்றன.
இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:
கடல் சீற்றமாக இருக்கும்போது படகுளை சீராக இயக்க முடியாது. அலையில் சிக்கி படகுகள் கவிழும் வாய்ப்பு உள்ளது. மேலும் குளிர்ந்த காற்று வீசுகிறது. அதேபோன்று, புயல் உருவாகும் சமயங்களில் எதிர்பார்க்கும் அளவிற்கு மீன்களும் கிடைக்காது. அதன் காரணமாகவே கடலில் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.