/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
2 வாரமாக முடங்கிய நெசவு பணி விறுவிறு
/
2 வாரமாக முடங்கிய நெசவு பணி விறுவிறு
ADDED : அக் 30, 2025 10:07 PM
பொதட்டூர்பேட்டை:  புயல் மழையால் இரண்டு வாரங்களாக முடங்கிக்கிடந்த நெசவு பணி நேற்று முதல் மீண்டும் விறுவிறுப்பாக துவங்கியுள்ளது.
ஆர்.கே.பேட்டை, பள்ளிப் பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விசைத்தறி நெசவு தொழில் நடந்து வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற் பட்டோர் நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
விசைத்தறிகளுக்கு தேவை யான நுால் கட்டுகளுக்கு பசை சேர்த்தல், பாவு தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் பொதட்டூர்பேட்டை, அம்மையார் குப்பம், சொரக்காய்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் நடந்து வருகிறது.
பசை சேர்க்கப்பட்ட நு ால் கட்டுகளை வெயிலில் காய வைத்தால் தான் பாவு தயாரிக்க முடியும். கடந்த இரண்டு வாரங்களாக மழை பெய்து வந்ததால், பசை சேர்ப்பு பணி நிறுத்தப்பட்டிருந்தது. பாவு தயாரிப்பு இல்லாததால், விசைத்தறிகளும் முடங்கி கிடந்தன.
மழை ஓய்ந்து நேற்று முன்தினம் முதல் வெயில் துவங்கியுள்ளதால் நேற்று முதல் நுால் கட்டுகளுக்கு பசை சேர்ப்பு பணியை நெசவாளர்கள் துவங்கியுள்ளனர். இதனால், நெசவுப் பணிகள் மீண்டும் விறு விறுப்பாக நடந்து வருகின்றன.

