/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரணிவராகர் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை
/
தரணிவராகர் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை
ADDED : அக் 06, 2025 11:20 PM

பொதட்டூர்பேட்டை தரணிவராக சுவாமி கோவில் பிரம்மோத்சவத்தில், நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேல்பொதட்டூர் தரணிவராக சுவாமி கோவிலில், கடந்த 3ம் தேதி பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சேஷ வாகனம், அனமந்த வாகனம் என, பல்வேறு வாகனங்களில் உத்சவர் வீதியுலா வருகிறார்.
சிறப்பு மிக்க கருட சேவை, கடந்த 4ம் தேதி இரவு நடந்தது. நேற்று காலை கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தரணிவராக சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இரவு 7:00 மணிக்கு கஜ வாகனத்தில் உத்சவர் பெருமாள் எழுந்தருளினார். இன்று காலை 10:30 மணிக்கு சக்கர ஸ்தானத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
ருத்ராபிஷேகம் ஆர்.கே.பேட்டை அடுத்த ராசபாளையம் பாலகுருநாதீஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, பவுர்ணமியை ஒட்டி காலை 9:30 மணிக்கு ருத்ராபிஷேகம் நடைபெற்றது. புனிதநீர் கலசங்களுடன் ராசபாளையம் கிராமத்தினர் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
பவுர்ணமி கிரிவலம் ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் பஞ்சாட்சர மலையில், பவுர்ணமியை ஒட்டி நேற்று மாலை மரகதேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, ஸ்ரீகாளிகாபுரத்தில் இருந்து சேதுவராகபுரம், பந்திகுப்பம் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக கிரிவலம் நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்றனர்.