/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் களைகட்டிய இயற்கை வேளாண் சந்தை
/
திருவள்ளூரில் களைகட்டிய இயற்கை வேளாண் சந்தை
ADDED : ஏப் 14, 2025 01:11 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் உழவர் சந்தை வளாகத்தில் நேற்று, இயற்கை வேளாண் சந்தையை திறந்து வைத்து, இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் உணவு பொருட்களை கலெக்டர் பார்வையிட்டார்.
அதன்பின் கலெக்டர் பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை மற்றும் இயற்கை விவசாயிகள் சார்பில், இயற்கை முறையில் சாகுபடி செய்யும் வேளாண் பொருட்களை விற்பனை மற்றும் சந்தைப்படுத்துவதற்காக துவக்கப்பட்டது.
சத்தான உணவு பொருட்களில் நச்சு கலக்காமல், மக்களுக்கு ஆரோக்கியமான உணவு பொருட்களை வழங்குவதற்காக, தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. வரும் காலங்களில் விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயம் முறைகளுக்கு மாற வேண்டும்.
இந்த இயற்கை வேளாண் சந்தையில் காய்கறி, பழ வகைகள், சிறுதானிய மதிப்புக்கூட்டு பொருட்கள், மரச்செக்கு எண்ணெய், பாரம்பரிய அரிசி வகைகள், தேன், மாடித் தோட்ட உபகரணங்கள் மற்றும் பனைவெல்லம் ஆகியவை காட்சிப்படுத்தி, திருவள்ளூர் நகரத்தை சேர்ந்த நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.
இதில், திருவள்ளூர் வேளாண் இணை இயக்குனர் கலாதேவி, துணை இயக்குனர்கள் வேளாண் வணிகம் சசிரேகா, தோட்டக்கலைத்துறை ஜெபக்குமாரி அனி, காஞ்சிபுரம் விற்பனை குழு செயலர் நடராஜன், திரூர் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் பானுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

