/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துார் அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்
/
கடம்பத்துார் அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்
ADDED : ஜன 10, 2025 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார், கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நலன் கருதி, சென்னை கொளத்தூர் ரோட்டரி கிளப் சார்பாக, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பிளாஸ்டிக் நாற்காலி, ஸ்மார்ட் வகுப்பறைக்கான ஒலி, ஒளி பெருக்கி பெட்டிகள் வழங்கப்பட்டன.
பள்ளி தலைமையாசிரியர் குமாரிகுட்டி தலைமையில் நேற்று நிகழ்ச்சி நடந்நது.
இதில், கொளத்தூர் ரோட்டரி கிளப் தலைவரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான சிவகுமார், செயலர் சுதா சிவகுமார், ஆகியோர் கூட்டாக, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை தலைமையாசிரியரிடம் வழங்கினர்.

