/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துாய்மை பணியாளருக்கு நல வாரிய அட்டை
/
துாய்மை பணியாளருக்கு நல வாரிய அட்டை
ADDED : பிப் 18, 2025 09:28 PM
திருவள்ளூர்:துாய்மைப் பணியாளர்களுக்கு, 'தாட்கோ' வாயிலாக நலவாரிய அட்டை வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வன்கொடுமை தடுப்பு சட்டம் மாவட்ட விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:
வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள வழக்கு மற்றும் தற்போதைய வழக்குகளில் விரைந்து தீர்வு காண வேண்டும்.
'தாட்கோ' வாயிலாக துாய்மை பணியாளர்களுக்கு, நல வாரிய அட்டை வழங்கப்பட வேண்டும். மேலும், தற்காலிக துாய்மை பணியாளரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையினை அதிக எண்ணிக்கையில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், எஸ்.பி., சீனிவாசபெருமாள், ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வராணி உட்பட பலர் பங்கேற்றனர்.

