/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காடாக மாறிய கால்வாய் பராமரிப்பு பணி என்னாச்சு?
/
காடாக மாறிய கால்வாய் பராமரிப்பு பணி என்னாச்சு?
ADDED : மார் 18, 2025 12:47 AM

ஆர்.கே.பேட்டை; ஆர்.கே.பேட்டை ஒன்றியம் நீலோத்பாலாபுரம் கிராமத்தின் தென்கிழக்கில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவிலை ஒட்டியுள்ள மலைகளில் இருந்து நீர்வரத்து உள்ளது.
ஏரியின் உபரிநீர் கால்வாய், நீலோத்பாலாபுரம் கிராமத்தை ஒட்டி செல்கிறது. இந்த கால்வாய் ஐந்து ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி துார்ந்து கிடக்கிறது. இக்கால்வாயில், 10 அடி உயரத்திற்கும் மேல் செடி, கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது.
இதனால், உபரிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், துார்ந்து கிடக்கும் கால்வாயில், அப்பகுதிவாசிகள் கழிவுநீரை குழாய் வாயிலாக திறந்து விட்டுள்ளனர். இதனால், கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது.
மேலும், கழிவுநீரும் வெளியேற வழியில்லாததால், கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. உபரிநீர் கால்வாயை சுத்தம் செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.