/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
/
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
ADDED : அக் 05, 2025 01:27 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அமைக்கப்பட்ட கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதாலும், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுப்பதாலும், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை பேரூராட்சி நாகலாபுரம் சாலை, காமராஜர் மண்டப சாலையில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில், சமீபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கப்பட்டது.
பணிகள் நடந்த போது, கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், முக்கிய சாலை உயரமாக இருப்பதால், அங்கிருந்து கழிவுநீர் மண்டப சாலை வருவதற்கு வாய்ப்புள்ளது என, கலெக்டரிடம் கூறினர்.
இதை கேட்ட கலெக்டர், தற்போது அமைக்கப்பட்டு வரும் கால்வாயை உயரமாக அமைத்து, கழிவுநீர் தேங்காமல் செல்லும் வகையில் அமைக்குமாறு அறிவுறுத்தினார்.
ஆனால், கலெக்டரின் உத்தரவை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் கண்டுகொள்ளாமல், மண்டப சாலையில் தாழ்வாக கால்வாயை அமைத்தனர்.
இதனால், இப்பகுதியில் கால்வாயில் கழிவுநீர் தேங்கியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், தண்ணீர் செல்ல வழியின்றி சாலையிலேயே தேங்கியது.
மேலும், கால்வாயில் உள்ள கழிவுநீரும் இதில் கலந்ததால், துர்நாற்றம் வீசுவதுடன், மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.
மேலும், பேரூராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான இடங்களில் கழிவுநீர் செல்லாமல் தேங்கியுள்ளது. எனவே, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன், கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடு த்துள்ளனர்.