/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏரியை துார் வாராமல் கரையை சீரமைத்து என்ன பயன்?
/
ஏரியை துார் வாராமல் கரையை சீரமைத்து என்ன பயன்?
ADDED : ஜூலை 31, 2025 01:11 AM

ஆர்.கே.பேட்டை:நீர்ப்பிடிப்பு கொள்ளளவை தக்கவைக்கும் விதமாக ஏரியை துார்வாராமல், கரையை மட்டும் பலப்படுத்தும் பணிகள் நடந்து வருவதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், விடியங்காடு ஊராட்சிக்கு உட்பட்டது தாமரைகுளம் கிராமம். விடியங்காடு, கீரைசாத்து உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து இந்த ஏரிக்கு நீர்வரத்து இருந்து வருகிறது.
இந்த ஏரியின் நீர்வளத்தால், ஐந்தாயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், இந்த ஏரியின் கரையை பலப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. இதில், ஏரியின் மதகுகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், ஏரியை துார்வாராமல் கரையை பலப்படுத்துவதும், மதகை சீரமைப்பதும் பயன் அளிக்காது என விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதே போல் கலங்கல் பகுதியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. கலங்கலில் இருந்து நீர்வெளியேறும் பகுதியில் தாமரைகுளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது.
இந்த சாலையும், தண்ணீர் வெளியேறும் பகுதியில் மேம்பாலமும் கட்டப்பட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

