/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செம்மண் குவாரி குட்டைகளுக்கு தடுப்பு வேலி அமைப்பது எப்போது?
/
செம்மண் குவாரி குட்டைகளுக்கு தடுப்பு வேலி அமைப்பது எப்போது?
செம்மண் குவாரி குட்டைகளுக்கு தடுப்பு வேலி அமைப்பது எப்போது?
செம்மண் குவாரி குட்டைகளுக்கு தடுப்பு வேலி அமைப்பது எப்போது?
ADDED : மே 17, 2025 02:16 AM

சோழவரம்:சோழவரம் அடுத்த பழைய எருமைவெட்டிப்பாளையம், தேவனேரி, புதிய எருமைவெட்டிப்பாளையம் ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில், 25 ஆண்டுகளுக்கு முன் செம்மண் குவாரிகள் செயல்பட்டன.
இதற்காக, ஒவ்வொரு பகுதியிலும் 20 - 40 அடி ஆழத்திற்கு செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதில், ராட்சத பள்ளங்கள் உருவாகின. தற்போது, மழைநீர் தேங்கும் குட்டைகளாக மாறியுள்ளன.
விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் தண்ணீர் தேங்கியுள்ள குட்டையில், ஆபத்தை உணராமல் ஜாலியாக குளித்து விளையாடுகின்றனர்.
கடந்த காலங்களில், பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். தற்போது, கோடை விடுமுறை என்பதால், குட்டைகளில் குளிக்க வரும் மாணவர்கள், அசம்பாவிதங்களில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே, செம்மண் குவாரிகள் செயல்பட்ட இடங்களை சுற்றிலும் முள்வேலி அமைத்தும், எச்சரிக்கை பலகைகள் வைத்தும், அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.