/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூந்தமல்லி வருவாய் துறை பதிவேட்டில் பழஞ்சூர் கிராமத்தை இணைப்பது எப்போது?
/
பூந்தமல்லி வருவாய் துறை பதிவேட்டில் பழஞ்சூர் கிராமத்தை இணைப்பது எப்போது?
பூந்தமல்லி வருவாய் துறை பதிவேட்டில் பழஞ்சூர் கிராமத்தை இணைப்பது எப்போது?
பூந்தமல்லி வருவாய் துறை பதிவேட்டில் பழஞ்சூர் கிராமத்தை இணைப்பது எப்போது?
ADDED : ஜூலை 27, 2025 09:09 PM
பூந்தமல்லி:திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகா செம்பரம்பாக்கம் ஊராட்சியில், செம்பரம்பாக்கம், பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு, 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
கடந்த 1997ம் ஆண்டு ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோது, செம்பரம்பாக்கம் கிராமம், பூந்தமல்லி தாலுகாவில் இணைந்தது.
பழஞ்சூர் மற்றும் பாப்பான்சத்திரம் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் இணைக்கப்பட்டன.
ஒரே ஊராட்சிக்குட்பட்ட இந்த கிராமங்கள், இரண்டு மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்ததால், அங்கு வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்கு இரண்டு மாவட்டங்களுக்கும் சென்று அலைக்கழிக்கப்பட்டு வந்தனர்.
பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களை, பூந்தமல்லி தாலுகாவில் முழுமையாக இணைக்க, அப்பகுதிமக்கள் போராடி வந்தனர்.
இதையடுத்து, சென் னை உயர் நீதிமன்றத்தில் செம்பரம்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் வின்சென்ட், 2017ல் 'ரிட்' மனு தாக்கல்செய்தார்.
வழக்கு விசாரணை முடிவில், இரு கிராமங்களையும் திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என, 2019ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இரு கிராமங்களையும், பூந்தமல்லி தாலுகாவுடன் இணைத்து, 2022 ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து அனைத்து சேவைகளும், பூந்தமல்லி தாலுாகாவுக்கு மாற்றப்பட்டன.
ஆனால், பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமம் பூந்தமல்லி தாலுகா வருவாய் துறை பதிவேட்டில் இல்லை.
இன்னமும் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்கு உட்பட்ட மேவளூர்குப்பம் 'ஆ' கிராமம் என்றே உள்ளது.
இதுகுறித்து, பழஞ்சூர் மக்கள் கூறுகையில், 'பழஞ்சூர் கிராமத்தை, பூந்தமல்லி வருவாய் கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லை எனில் பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றனர்.