/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துணை சுகாதார நிலைய பணி நிறைவு பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
/
துணை சுகாதார நிலைய பணி நிறைவு பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
துணை சுகாதார நிலைய பணி நிறைவு பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
துணை சுகாதார நிலைய பணி நிறைவு பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
ADDED : மார் 06, 2025 01:47 AM

புட்லுார்:புட்லுார் துணை சுகாதார நிலைய பணி நிறைவடைந்த நிலையில், பயன்பாட்டிற்கு வருவது எப்போது என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் ஒன்றியம் புட்லுார் கிராமத்தில், 1,500க்கும் மேற்பட்ட வீடுகளில், 8,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில், பெருமாள்பட்டு கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ், துணை சுகாதார நிலையம் புட்லுார் கிராமத்தில் செயல்பட்டு வந்தது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இக்கட்டடம் கட்டப்பட்டதால் சேதமடைந்து, பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதுகுறித்து, கிராமவாசிகள் சுகாதார துறை அமைச்சர், எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர்.
இதையடுத்து, புட்லுார் தோப்பு புறம்போக்கு நிலத்தில், 650 ச.மீட்டர் பரப்பளவில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டும் பணி, 2022ல் துவங்கியது. பணி துவங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது கட்டட பணி நிறைவடைந்துள்ளது.
இருப்பினும், இந்த துணை சுகாதார நிலையம் திறக்கப்படாமல் உள்ளதால், கிராமவாசிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் கர்ப்பிணியர், 5 கி.மீ., துாரம் பயணித்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
எனவே, கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில், துணை சுகாதார நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.