/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி - சித்துார் சாலையில் ரவுண்டானா பணிகளை முடிப்பது எப்போது ஆபீசர்ஸ்? நெ.சா.துறை அதிகாரிகள் அலட்சியம்

ADDED : ஆக 20, 2025 02:19 AM

திருத்தணி:மாநில நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகளை தடுக்கும் வகையில், 1.67 கோடி ரூபாயில் ரவுண்டான அமைக்கும் பணியை முடிக்காமல், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
திருத்தணி - சித்துார் மாநில நெடுஞ்சாலையில் இருந்து, சென்னை, திருப்பதி, திருவள்ளூர் மற்றும் அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற இடங்களுக்கு, திருத்தணி செங்குந்தர் நகர் பகுதியில் இருந்து அனைத்து வாகனங்களும் பிரிந்து செல்கின்றன.
இந்த இடத்தில், 24 மணி நேரமும் அனைத்து வாகனங்களும் பிரிந்து செல்லும் போது, அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. இதில், பலர் படுகாயமடைந்தும், சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
திருத்தணி நெடுஞ்சாலை துறையினர், விபத்தை தடுக்க செங்குந்தர் நகர் பகுதியில் பிரிந்து செல்லும் இடத்தில் ரவுண்டான அமைத்து, சாலை விரிவாக்கம் செய்வதற்காக, 1.67 கோடி ரூபாய் மதிப்பில் ஆறு மாதத்திற்கு முன் பணிகளை துவக்கினர். தற்போது, சாலை விரிவாக்க பணிகள் நிறைவடைந் துள்ளன.
ரவுண்டானா அமையும் இடத்தில் இருந்த தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், அங்கிருந்த மரங்களை வெட்டியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. ஆனால், முழுமையாக ரவுண்டான அமைக்காமல், நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
ரவுண்டானாவுக்கு ஒரு பகுதி சுற்றுச்சுவர் அமைக்காமல், பல மாதங்களாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு நடப்பதற்கு அதிகளவில் வாய்ப்புகள் உள்ளன.
எனவே, கலெக்டர் ரவுண்டான அமைக்கும் பணியை ஆய்வு செய்து, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.