/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செல்லியம்மன் கோவிலில் 11வது முறையாக திருட்டு போலீசார் விழிப்பது எப்போது?
/
செல்லியம்மன் கோவிலில் 11வது முறையாக திருட்டு போலீசார் விழிப்பது எப்போது?
செல்லியம்மன் கோவிலில் 11வது முறையாக திருட்டு போலீசார் விழிப்பது எப்போது?
செல்லியம்மன் கோவிலில் 11வது முறையாக திருட்டு போலீசார் விழிப்பது எப்போது?
ADDED : செப் 23, 2025 10:31 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில், நேற்று 11வது முறையாக திருடு போனதால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னமண்டலி கிராமம். இங்கு, 2,000 ஆண்டுகள் பழமையான நிரஞ்சீஸ்வரர் கோவில் அருகே செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது.
நேற்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த, 2 கிராம் தங்க தாலி மற்றும் பூஜை பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
இக்கோவிலில், நான்கு ஆண்டுகளில் 11வது முறை திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, பூசாரி அளித்த தகவலின்படி, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18 கிராம் தங்கம்; 5 லட்சம் ரூபாய்
மதிப்பிலான பொருள் திருட்டு
செல்லியம்மன் கோவிலில் 11வது முறையாக திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதுவரை நடந்த திருட்டில், 2 கிராம் தங்கத்தாலி என, 18 கிராம் தங்கம் திருடு போயுள்ளது. பணம், வெள்ளி என, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போயுள்ளன. அதேபோல, நிரஞ்சீஸ்வரர் கோவிலில் ஏழு முறை திருடு போயுள்ளது. தங்கத்திலான தாலி, வெள்ளி பொருட்கள் என, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போயுள்ளது. போலீசார் உரிய விசாரணை நடத்தி, திருடர்களை விரைந்து கைது செய்ய ந டவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிராம மக்கள், சின்னமண்டலி, திருவாலங்காடு.