/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் தேங்கிய கால்வாய் சீரமைப்பு பணி எப்போது?
/
கழிவுநீர் தேங்கிய கால்வாய் சீரமைப்பு பணி எப்போது?
ADDED : மார் 19, 2025 01:41 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை மற்றும் சுற்றியுள்ள கட்டடங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், பொதுப்பணி துறை கால்வாய் வாயிலாக, புங்கத்துார் ஏரியை அடைகிறது.
இதற்காக, காவல் கண்காணிப்பாளர் வீட்டிற்கு அருகில் இருந்து, பொதுப்பணி கால்வாய் புறப்பட்டு, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம், ஜவஹர் நகர் வழியாக புங்கத்துார் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த கால்வாய் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டும், ஆக்கிரமிப்பாலும் சுருங்கி விட்டது. இதன் காரணமாக, இக்கால்வாயில் மழைநீர் வெளியேற வழியின்றி, காவல் நிலையம் அருகில் இருந்து, காவலர் குடியிருப்பு வரை குளமாக தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அவற்றில் கொசு உற்பத்தியாவதால், குடியிருப்புவாசிகள் தொற்று நோய் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, பொதுப்பணி துறையினர், உடனடியாக அந்த கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.