/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்ணீரில் தத்தளிக்கும் திருமழிசை எப்போது தீர்வு கிடைக்கும் ஆபீசர்?
/
தண்ணீரில் தத்தளிக்கும் திருமழிசை எப்போது தீர்வு கிடைக்கும் ஆபீசர்?
தண்ணீரில் தத்தளிக்கும் திருமழிசை எப்போது தீர்வு கிடைக்கும் ஆபீசர்?
தண்ணீரில் தத்தளிக்கும் திருமழிசை எப்போது தீர்வு கிடைக்கும் ஆபீசர்?
ADDED : அக் 27, 2025 01:04 AM

திருமழிசை: திருமழிசை பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருமழிசை பேரூராட்சியில், 15 வார்டுகளில் 130க்கும் மேற்பட்ட தெருக்களில், 18,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள ஜெகந்நாத பெருமாள் கோவில், ஒத்தாண்டேஸ்வரர் கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கியுள்ளது.
ஜெகந்நாத பெருமாள் கோவில் வளாகத்திலும் மழைநீர் தேங்கியுள்ளதால், பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து, குடியிருப்புகளின் சாலைகளில் வழிந்தோடி, ஆங்காங்கே சிறு குளம்போல் தேங்கியுள்ளது. மேலும், பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள தெற்கு மாடவீதி மற்றும் பேரூராட்சி தி.மு.க., தலைவர் வீடு அமைந்துள்ள எல்லப்ப நகர் பகுதியில், மழை நேரங்களில் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் திருமழிசை பேரூராட்சியில் ஆய்வு செய்து, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

