/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பை அள்ள வாங்கிய வாகனம் ஏங்கே? அ.தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம்
/
குப்பை அள்ள வாங்கிய வாகனம் ஏங்கே? அ.தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம்
குப்பை அள்ள வாங்கிய வாகனம் ஏங்கே? அ.தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம்
குப்பை அள்ள வாங்கிய வாகனம் ஏங்கே? அ.தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம்
ADDED : மே 28, 2025 11:39 PM

பொன்னேரி,பொன்னேரி நகராட்சி கூட்டம், நேற்று தலைவர் பரிமளம் தலைமையில் நடந்தது. இதில், தி.மு.க., - அ.தி.மு.க, கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது, அ.தி.மு.க., வார்டுகளில் எந்த திட்டப்பணிகளும் நடைபெறவில்லை எனவும், தங்களது வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறினர்.
நகராட்சி நிர்வாகத்திடம் உரிய பதில் இல்லாத நிலையில், அ.தி.மு.க, கவுன்சிலர்கள், துணை தலைவர் விஜயகுமார் தலைமையில் கூட்டத்தை புறக்கணித்து, கூட்டரங்கின் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து துணைத் தலைவர் விஜயகுமார் கூறியதாவது:
நகராட்சிக்கு குப்பை சேகரிப்பிற்காக வாங்கப்பட்ட ஐந்து லாரிகளில், இரண்டு மட்டுமே இருப்பதாகவும், மற்றவை எங்கு போனது என தெரியவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டும் பதில் இல்லை.
சமீபத்தில் அமைக்கப்பட்ட தெருச்சாலைகள் சேதமடைந்து உள்ளன. அவற்றிற்கு மீண்டும் நிதி ஒதுக்கி சீரமைக்கின்றனர். அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளில் பல ஆண்டுகளாக சாலைகள் சேதமடைந்தும், அதை புதுப்பிக்க நிதி ஒதுக்குவதில்லை.
மக்களுக்கு பயன் தரும் சாலைகளை புதுப்பிக்காமல், நிர்வாகத்திற்கு வேண்டப்பட்டவர்களின் வசதிக்கு சாலைகள் அமைக்கப்படுகின்றன. நகராட்சி நிர்வாகம் மக்களின் வரிப்பணத்தை சரியான திட்டமிடல் இன்றி, பணிகளை மேற்கொண்டு நிதியை வீணடித்து வருகிறது.
இதுகுறித்து கேட்டால் சரியான பதில் இல்லை. நகராட்சித் துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.