/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்கம்பங்களில் கேபிள் ஒயர்கள் விபத்துக்கு பொறுப்பேற்பது யார்? சமூக ஆர்வலர்கள் கேள்வி
/
மின்கம்பங்களில் கேபிள் ஒயர்கள் விபத்துக்கு பொறுப்பேற்பது யார்? சமூக ஆர்வலர்கள் கேள்வி
மின்கம்பங்களில் கேபிள் ஒயர்கள் விபத்துக்கு பொறுப்பேற்பது யார்? சமூக ஆர்வலர்கள் கேள்வி
மின்கம்பங்களில் கேபிள் ஒயர்கள் விபத்துக்கு பொறுப்பேற்பது யார்? சமூக ஆர்வலர்கள் கேள்வி
ADDED : ஜூலை 09, 2025 02:14 AM

திருவாலங்காடு:திருவாலங்காடில் அனைத்து மின் கம்பங்களிலும், கேபிள் மற்றும் தனியார் இன்டர்நெட் ஒயர்கள் கட்டப்பட்டுள்ளன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பர் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், 15,000க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன.
இதன் வாயிலாக, வீடுகளுக்கு மின் வினியோகம் நடைபெறுகிறது. இந்த மின் கம்பங்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், கம்பங்களில் ஏறி மின் ஊழியர்கள் அதை சரிசெய்வர்.
இந்நிலையில், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில், தனியார் சிலர் கேபிள் மற்றும் தனியார் இன்டர்நெட் ஒயர்களை மின்கம்பத்தில் கட்டியுள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு மின்கம்பத்திலும் அதிகபட்சமாக, 10க்கும் மேற்பட்ட ஒயர்களை கட்டி வைத்துள்ளனர். உயரழுத்த மின்கம்பங்களையும் விட்டு வைக்கவில்லை.
ஒரு சில இன்டர்நெட் நிறுவனங்கள் மட்டும் தனியாக கம்பங்களை நட்டு, ஒயர்களை கொண்டு செல்கின்றனர். மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள ஒயர்கள், ஆங்காங்கே அறுந்து தொங்கி கொண்டிருக்கின்றன.
இவை காற்றின் வேகத்தில் மின் கம்பிகளில் உரசினால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வீடுகளில் கேபிள் மற்றும் தொலைபேசி இணைப்புகளில் மின்சாரம் பாய்ந்தால், மிகப்பெரிய விபத்துக்கு வழிவகுக்கும்.
இதுகுறித்து அவ்வப்போது மின்வாரியத்தால் எச்சரிக்கப்படும் நிலையில், விபத்துக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.