/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாழடைந்த அங்கன்வாடி மையம் இடித்து அகற்ற தாமதம் ஏன்?
/
பாழடைந்த அங்கன்வாடி மையம் இடித்து அகற்ற தாமதம் ஏன்?
பாழடைந்த அங்கன்வாடி மையம் இடித்து அகற்ற தாமதம் ஏன்?
பாழடைந்த அங்கன்வாடி மையம் இடித்து அகற்ற தாமதம் ஏன்?
ADDED : அக் 04, 2024 02:27 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் சின்னகடம்பூர் ஊராட்சி, மேல்கசவராஜபேட்டையில் உள்ள அங்கன்வாடி மையம், 15 ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்டது.
ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், அங்கன்வாடி மையம் பழுதடைந்தது. இந்நிலையில், இந்த கட்டடம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்ததால், மூன்று மாதங்களுக்கு முன் பூட்டப்பட்டது.
தற்போது, அங்கன்வாடி மையம் அதே பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு இயங்கி வருகிறது. அங்கு போதிய வசதிகள் இல்லாததால், தினமும் குழந்தைகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடம் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளி உணவு இடைவேளையின் போது மாணவர்கள் பழுதடைந்த அங்கன்வாடி மையம் அருகே சென்று விளையாடுவதால், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
மேலும் அங்கன்வாடி இடித்து விழுந்தால், பள்ளி கட்டடம் மற்றும் மாணவர்களுக்கும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.