/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஸ்கூட்டர் மீது லாரி மோதல் கணவர் கண்முன் மனைவி பலி
/
ஸ்கூட்டர் மீது லாரி மோதல் கணவர் கண்முன் மனைவி பலி
ADDED : ஜன 19, 2025 08:28 PM
பூந்தமல்லி:ஸ்ரீபெரும்புதுார் அருகே வளர்புரத்தைச் சேர்ந்தவர் பிரகலநாதன், 50. இவரது மனைவி முருவம்மாள், 45.
இவர்களுக்கு பேரக்குழந்தை பிறந்ததால், குழந்தையை பார்க்க போரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, டி.வி.எஸ்., பிளஷர் ஸ்கூட்டரில் சென்றனர். ஸ்கூட்டரை பிரகலநாதன் ஓட்டினார்.
சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அருகே, திருமழிசை கூட்டு சாலையை கடந்து சென்றபோது, பின்னால் வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில், லாரியின் அடியில் சிக்கிய முருவம்மாள், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பிரகலநாதன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், முருவம்மாள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் பாலசுப்ரமணி, 47, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.