/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காப்பூர் கண்டிகையில் வீணாகி வரும் வனவிலங்கு குடிநீர் தொட்டி
/
காப்பூர் கண்டிகையில் வீணாகி வரும் வனவிலங்கு குடிநீர் தொட்டி
காப்பூர் கண்டிகையில் வீணாகி வரும் வனவிலங்கு குடிநீர் தொட்டி
காப்பூர் கண்டிகையில் வீணாகி வரும் வனவிலங்கு குடிநீர் தொட்டி
ADDED : நவ 26, 2025 04:55 AM

பள்ளிப்பட்டு: காப்புக்காடு அருகே வனவிலங்குகளுக்காக கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டி, பராமரிப்பு இன்றி வீணாகி வருகிறது.
பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி ஊராட்சிக்கு உட்பட்டது காப்பூர் கண்டிகை. நொச்சிலி மற்றும் காப்பூர் கண்டிகையை ஒட்டி காப்புக்காடுகள் அமைந்துள்ளன.
இந்த காப்புக்காடுகளில், மான், சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக, காப்புக்காடு ஒட்டிய பகுதியில் வனவிலங்கு குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாமல் சீரழிந்து வருகின்றன.
காப்பூர் கண்டிகை அருகே உள்ள வனவிலங்கு குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாமல், குப்பையும், இலை சருகுகளும் குவிந்துள்ளன. இதனால், வனவிலங்குகள் குடிநீருக்காக தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
வனவிலங்கு குடிநீர் தொட்டிகளில் சீரான இடைவெளியில் தண்ணீர் நிரப்பவும் அவற்றை சுத்தமாக பராமரிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

