/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாழடைந்துள்ள போலீஸ் குடியிருப்பு புதிய கட்டடம் கட்டப்படுமா?
/
பாழடைந்துள்ள போலீஸ் குடியிருப்பு புதிய கட்டடம் கட்டப்படுமா?
பாழடைந்துள்ள போலீஸ் குடியிருப்பு புதிய கட்டடம் கட்டப்படுமா?
பாழடைந்துள்ள போலீஸ் குடியிருப்பு புதிய கட்டடம் கட்டப்படுமா?
ADDED : ஜூலை 17, 2025 02:10 AM
கும்மிடிப்பூண்டி:பாதிரிவேடு போலீஸ் குடியிருப்பு கட்டடங்களை அகற்றி புதிய குடியிருப்பு கட்டடங்கள் நிறுவ, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாதிரிவேடு போலீஸ் நிலையத்தின் பின்புறம், 2000ம் ஆண்டின் போது காவலர் குடியிருப்பு வளாகம் திறக்கப்பட்டது. அதில், 12 காவலர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளும், இரு தலைமை காவலர்கள், எஸ்.ஐ.,க்கு தனி வீடுகளும் உள்ளன.
முறையான பராமரிப்பு இன்றி குடியிருப்பு வீடுகள் பழுதானதால், மூன்று ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்த லாயக்கற்ற கட்டடம் என அறிவிக்கப்பட்டது. காவலர்கள் ஓய்வு எடுக்க மட்டும் அந்த குடியிருப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.
பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில், வேலை பார்க்கும் போலீசார், அந்த குடியிருப்பு வளாகத்தில் வசிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
இதனால் பல சிரமங்களுக்கு இடையே வெளி இடங்களில் இருந்து வேலைக்கு வந்து செல்கின்றனர்.
அலைச்சல் இன்றி போலீசார் பணி மேற்கொள்ளும் வகையில், பழைய குடியிருப்பு கட்டடங்களை இடித்து புதிய குடியிருப்பு வளாகம் நிறுவ அரசு முன் வர வேண்டும், என, போலீசாரிடம் கோரிக்கை எழுந்துள்ளது.