/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிப்பட்டு மருத்துவமனை எதிரே நிழற்குடை அமைக்கப்படுமா?
/
பள்ளிப்பட்டு மருத்துவமனை எதிரே நிழற்குடை அமைக்கப்படுமா?
பள்ளிப்பட்டு மருத்துவமனை எதிரே நிழற்குடை அமைக்கப்படுமா?
பள்ளிப்பட்டு மருத்துவமனை எதிரே நிழற்குடை அமைக்கப்படுமா?
ADDED : டிச 09, 2024 02:16 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து, நகரி செல்லும் சாலையில், கோனேட்டம்பேட்டையில் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில், பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம மக்களும், பள்ளிப்பட்டு அடுத்த ஆந்திர மாநில கிராமங்களைச் சேர்ந்தவர்களும் வந்து சிகிச்சை மற்றும் பரிதசோதனைகளை மேற்கொள்கின்றனர்.
பள்ளிப்பட்டு நகரில் இருந்து நகரி செல்லும் பேருந்து மற்றும் ஆட்டோக்களில் பயணித்து கோனேட்டம்பேட்டைக்கு வருகின்றனர். நகரி செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டியே மருத்துவமனை அமைந்துள்ளதால், நடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், மருத்துவமனை முன்பாக உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் காத்திருக்க பேருந்து நிழற்குடை இல்லை. இதனால், மருத்துவமனைக்கு வருபவர்கள் வெயில், மழையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
சற்று தொலையில் பேருந்து நிற்காத பகுதியில் உள்ள நிழற்குடையும் பழுதடைந்து இருக்கிறது. அதனால், யாருக்கும் எந்தவித பயனும் இல்லை. மருத்துவமனைக்கு வந்து செல்லும் பகுதிவாசிகளுக்கு பயன்படும் விதமாக மருத்துவமனை நுழைவாயிலை ஒட்டி, அடிப்படை வசதிகளுடன் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.