/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதான கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடை விபரீதத்திற்கு முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?

ADDED : ஜன 08, 2024 06:22 AM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த புலிக்குளம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் புலிக்குளம், சாய்பாலாஜி நகர், ஏரிக்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 350 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
இந்த கடை கட்டடம், 25ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்டு, உரிய பராமரிப்பு இல்லாதால், தற்போது சேதம் அடைந்து கிடக்கிறது.
கட்டடத்தின் கான்கிரீட் கட்டுமானங்கள் சிதைந்து உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் துருரபிடித்த நிலையில் வெளியில் தெரிகிறது.
கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன.அடித்தளப்பகுதிகளில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக பெயர்ந்து அதன் உறுதிதன்மையை குறைத்து உள்ளது. கட்டடத்தினை தாங்கி பிடித்திருக்கும் கான்கிரீட் துாணின் அடிப்பகுதியும் சேதம் அடைந்ததை தொடர்ந்து, அங்கு கற்களால் முட்டு கொடுக்கப்பட்டு உள்ளது.
மழைக்காலங்களில் கட்டடத்தின் கூரைகளில் உள்ள விரிசல்கள் வழியாக மழைநீர் உள்ளே கொட்டுவதால், உணவுப்பொருட்கள் வீணாகின்றன.மின் இணைப்பு வசதியும் இல்லை.
கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.
அசம்பாவிதங்கள் நேரிடும் முன் மேற்கண்ட கட்டடத்தை முழுமையாக இடித்து புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.