/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குவாரிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சுற்றிலும் முள்வேலி அமைக்கப்படுமா?
/
குவாரிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சுற்றிலும் முள்வேலி அமைக்கப்படுமா?
குவாரிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சுற்றிலும் முள்வேலி அமைக்கப்படுமா?
குவாரிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சுற்றிலும் முள்வேலி அமைக்கப்படுமா?
ADDED : நவ 21, 2024 02:33 AM

சோழவரம்,
சோழவரம் அடுத்த பழைய எருமைவெட்டிப்பாளையம், தேவனேரி, புதிய எருமைவெட்டிப்பாளையம் ஆகிய கிராமங்களைச் சுற்றிலும் உள்ள நிலங்கள் வனத்துறையின் கீழ் உள்ளது.
இப்பகுதிகளின் நிலப்பரப்பு செம்மண் கொண்டதாகும். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் சாலை பணிகளுக்காக, இந்த கிராமங்களில் குவாரிகள் அமைக்கப்பட்டு, செம்மண் அள்ளப்பட்டது.
இதற்காக, ஒவ்வொரு பகுதியிலும், 20 - 30 அடி ஆழத்திற்கு செம்மண் வெட்டி எடுக்கப்பட்டன. இதனால், இப்பகுதிகளில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் வரும் சிறுவர்கள், இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் தேங்கியுள்ள தண்ணீரில், ஆபத்தை உணராமல் ஜாலியாக குளித்து விளையாடுகின்றனர்.
அவ்வாறு குளிக்கும்போது பள்ளங்களில் சிக்கி அசம்பாவிதங்கள் நேரிடும் அபாயம் உள்ளது.
தற்போதும், அங்கு மழைநீர் தேங்கி உள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவிக்கினறனர்.
எனவே, ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரிடும் முன், குவாரி செயல்பட்ட இடங்களை சுற்றிலும் முள்வேலி அமைத்து, பாதுகாப்பு உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.