/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோளிங்கர் -- புத்துார் வழித்தடத்தில் மீண்டும் பேருந்து இயக்கப்படுமா?
/
சோளிங்கர் -- புத்துார் வழித்தடத்தில் மீண்டும் பேருந்து இயக்கப்படுமா?
சோளிங்கர் -- புத்துார் வழித்தடத்தில் மீண்டும் பேருந்து இயக்கப்படுமா?
சோளிங்கர் -- புத்துார் வழித்தடத்தில் மீண்டும் பேருந்து இயக்கப்படுமா?
ADDED : மே 05, 2025 01:48 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு தாலுகா மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட சோளிங்கர், குருவராஜபேட்டை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் நெசவாளர்கள், பாரம்பரியமாக விசைத்தறி நெசவு செய்து வருகின்றனர்.
அதேபோல், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்திற்கு உட்பட்ட நகரி, புத்துார், நாராயணவனம், கீழகரம் உள்ளிட்ட கிராமங்களிலும், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட நெசவாளர்கள் வசித்து வருகின்றனர்.
இரு மாநிலங்களை சேர்ந்த தமிழ் பேசும் நெசவாளர்களும் இணைந்து நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட நெசவாளர்களிடம் இருந்து லுங்கி நெசவு உற்பத்தி பொருட்கள் ஆந்திராவுக்கும், ஆந்திர மாநில நெசவாளர்களிடம் இருந்து, சுடிதார் மற்றும் சட்டை துணி உற்பத்தி பொருட்கள் தமிழகத்திற்கும் பரிமாறப்பட்டு வருகிறது.
இரு மாநில நெசவாளர்களும், சோளிங்கரில் இருந்து பள்ளிப்பட்டு, அடிவிகண்டிகை வழியாக இயக்கப்பட்டு வந்த தமிழக அரசு பேருந்து, தடம் எண்: 166 வாயிலாக பயணித்து வந்தனர். நெசவு பொருட்களையும் பேருந்து வாயிலாக கொண்டு சென்று வந்தனர்.
சோளிங்கரில் இருந்து புத்துாருக்கு, இப்பேருந்து விரைவு பாதை வழியாக இயக்கப்பட்டு வந்ததால், நெசவாளர்கள் எளிதாகவும், விரைவாகவும் நெசவு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் பேருந்து சேவை துவக்கவில்லை. எனவே, பேருந்து சேவையை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரு மாநில நெசவாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.