/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்நிலைகளில் சிறுவர்கள் குதுாகலம் எச்சரிக்கை பதாகை வைக்கப்படுமா?
/
நீர்நிலைகளில் சிறுவர்கள் குதுாகலம் எச்சரிக்கை பதாகை வைக்கப்படுமா?
நீர்நிலைகளில் சிறுவர்கள் குதுாகலம் எச்சரிக்கை பதாகை வைக்கப்படுமா?
நீர்நிலைகளில் சிறுவர்கள் குதுாகலம் எச்சரிக்கை பதாகை வைக்கப்படுமா?
ADDED : நவ 17, 2025 03:17 AM

ஆர்.கே.பேட்டை: நீர்நிலைகளில் பாதுகாப்பின்றி சிறுவர்கள் குளித்து வருகின்றனர். நீர்நிலைகளை ஒட்டி எச்சரிக்கை பதாகைகளை வைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், ஐந்து ஆண்டுகளாக ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. விடுமுறை நாட்களில் சிறுவர்கள், நீர்நிலைகளில் விளையாடவும், மீன்பிடிக்கவும் செல்கின்றனர்.
அப்போது, நீச்சல் தெரிந்தவர்களும் சேற்றில் சிக்கி உயி ரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. ஆர்.கே.பேட்டை - சித்துார் செல்லும் சாலையில், அஸ்வரேவந்தாபுரம் ஏரி கலங்கல் உள்ளது. நான்கு மாதங்களாக இந்த ஏரி கலங்கலில் தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது.
இந்த கலங்கல் நீர்வீழ்ச்சி போ ல் காணப்படுவதால், ஆபத்தை உணராத சிறுவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் குளித்து மகிழ்கின்றனர். அதேபோல், கைவிடப்பட்ட கல் குவாரிகளிலும் தண்ணீர் தேங்கி, குளம் போல் காணப்படுகிறது.
இந்த கல் குவாரி குட்டைகளிலும் சிறுவர்கள் விளையாடி வருகின்றனர். சிறுவர்களின் பாதுகாப்பு கருதி, நீர்நி லைகளை ஒட்டி எச்சரிக்கை பதாகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

