/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஈமச்சடங்கு செலவுகள் அதிகரிப்பு எரிவாயு தகன மேடை அமையுமா?
/
ஈமச்சடங்கு செலவுகள் அதிகரிப்பு எரிவாயு தகன மேடை அமையுமா?
ஈமச்சடங்கு செலவுகள் அதிகரிப்பு எரிவாயு தகன மேடை அமையுமா?
ஈமச்சடங்கு செலவுகள் அதிகரிப்பு எரிவாயு தகன மேடை அமையுமா?
ADDED : ஜூன் 18, 2025 08:00 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், 40,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் பொதுவாக கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோரம் பாப்பான்குளம் சுடுகாடு உள்ளது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த சுடுகாட்டில், எரிவாயு தகன மேடை அமைக்க, 2022ம் ஆண்டு, 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. சுடுகாடு அமைந்துள்ள பகுதி நீர் நிலை தொடர்புடைய இடம் என, அரசு பதிவில் இருப்பதால், கட்டுமானம் மேற்கொள்ள முடியாமல் திட்டம் கைவிடப்பட்டது.
வருமானம் குறைவாக உள்ள குடும்பத்தினர், ஈமச்சடங்கு செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். விறகுகள், வரட்டி சாணம், பெட்ரோல், சடங்கு செய்பவர்களுக்கு கூலி என, 25,000 ரூபாய் செலவிடுவதாக பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சுற்றுச்சூழலும் பாதிப்பதாக கூறுகின்றனர்.
எனவே, கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், எரிவாயு தகன மேடை உடனடியாக அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.