/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடை குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?
/
கால்நடை குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?
கால்நடை குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?
கால்நடை குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?
ADDED : ஆக 11, 2025 11:07 PM

திருவாலங்காடு, கால்நடைகளின் தாகம் தீர்க்க ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டிகளை, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளில், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதை சார்ந்து பலர், பால் உற்பத்திக்காக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல பகுதிகளில் நிலவும் வறட்சியால், நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.
மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடப்படும் கால்நடைகளுக்கு போதியளவு தண்ணீர் கிடைப்பதில்லை. கால்நடைகளின் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, செரிமானக்கோளாறால் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
கால் நடைகளின் தாகம் தீர்க்க, கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டிகள், பெரும்பாலும் பயன்பாடின்றி, செடிகள் முளைத்து காட்சியளிக்கின்றன.
கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:
அனைத்து கால்நடை மருந்தகத்திலும், சிகிச்சை மற்றும் கருவூட்டலுக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளுக்கு, குடிநீர் தொட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான தொட்டிகள் பயன்பாடின்றி, தண்ணீர் சேமித்து வைக்கப்படாமல் உள்ளன.
எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து, கால்நடைகள் நீர் பருக அமைக்கப்பட்ட தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

