/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வயலுாரில் சமுதாய கூடம் பயன்பாட்டிற்கு வருமா?
/
வயலுாரில் சமுதாய கூடம் பயன்பாட்டிற்கு வருமா?
ADDED : பிப் 13, 2024 08:24 PM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வயலுார் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் அருகே, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சமுதாய கூடம் கட்டப்பட்டது.
இந்த சமுதாய கூடத்தில் மின் இணைப்பு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.
இதனால் பகுதிவாசிகள் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் போன்ற பகுதிகளுக்கு சென்று, தனியார் மண்டபங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பயன்பாடில்லாத இந்த சமுதாய கூடத்தை 2014---15ம் ஆண்டு ஊரக கட்டடங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் 70,000 ரூபாய் மதிப்பில் வர்ணம் பூசும் பணி மட்டும் மேற்கொள்ளப்பட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இது வயலுார் பகுதிவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சமுதாய கூடத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென, வயலுார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

