/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்குமா-?
/
வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்குமா-?
வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்குமா-?
வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்குமா-?
ADDED : மே 05, 2025 01:42 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம் காப்பு காட்டில் மான், மயில், காட்டுப்பன்றி, உடும்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. எஸ்.வி.ஜி.புரத்தில் இருந்து வி.சி.ஆர்.கண்டிகை வரை, 10 கி.மீ., துாரத்திற்கு பரந்து விரிந்துள்ளது.
இந்த காப்பு காட்டில் வசிக்கும் மான்கள், கோடையில் குடிநீருக்காக அருகே உள்ள கிராமத்திற்கு படையெடுக்கும். கிராமத்திற்குள் வரும் மான்கள், தெரு நாய்களால் கடித்து குதறப்பட்ட சம்பவங்கள் ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் ஏராளமாக நடந்துள்ளன.
கடந்த 2014ல், எஸ்.வி.ஜி.புரம் காப்பு காட்டில் உள்ள முந்திரி தோப்பு பகுதியில், வனவிலங்குகளுக்காக குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. பின், அந்த தொட்டியை ஒட்டி பெரிய குளம் ஒன்றும் வெட்டப்பட்டது. மழைக்காலத்தில் இந்த குளத்தில் தேங்கும் தண்ணீர், வனவிலங்குகளுக்கு போதுமானதாக இருந்து வருகிறது.
தற்போதைய கோடையில் வறண்டு கிடக்கும் குடிநீர் தொட்டி மற்றும் குளத்தால், வனவிலங்குகள் தவித்து வருகின்றன. தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் சூழல் உள்ளது.
எனவே, வனவிலங்குகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, எஸ்.வி.ஜி.புரம் காப்புக்காட்டில், வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியில், தண்ணீர் நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.