/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுகாதார வளாகம் பாழ் இடித்து அகற்றப்படுமா?
/
சுகாதார வளாகம் பாழ் இடித்து அகற்றப்படுமா?
ADDED : செப் 08, 2025 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு, நார்த்தவாடாவில் பயன்பாடின்றி பாழடைந்த சுகாதார வளாகத்தை இடித்து அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம் நார்த்தவாடா கிராமத்தில், 2008ம் ஆண்டு கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம், 2012 -- 13ம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட்டது.
அதன்பின், ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், தற்போது சுகாதார வளாகம் பாழடைந்துள்ளது.
இதனால், அப்பகுதி பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, பாழடைந்துள்ள பெண்கள் சுகாதார வளாகத்தை இடித்து அகற்றி, புதிதாக அமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.