/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லட்சுமிபுரம் அணைக்கட்டு பாழ் மழைக்கு முன் சீரமைக்கப்படுமா?
/
லட்சுமிபுரம் அணைக்கட்டு பாழ் மழைக்கு முன் சீரமைக்கப்படுமா?
லட்சுமிபுரம் அணைக்கட்டு பாழ் மழைக்கு முன் சீரமைக்கப்படுமா?
லட்சுமிபுரம் அணைக்கட்டு பாழ் மழைக்கு முன் சீரமைக்கப்படுமா?
UPDATED : ஆக 18, 2025 01:02 AM
ADDED : ஆக 18, 2025 01:01 AM

பொன்னேரி:ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு, செடி, கொடிகள் வளர்ந்தும், பார்வையாளர் மாடம் சேதமடைந்தும் பராமரிப்பு இன்றி உள்ளது. மழைக்கு முன் சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது.
![]() |
மழைக்காலங்களில் அணைக்கட்டில் மழைநீர் தேக்கி வைக்கப்பட்டு, இருபுறமும் உள்ள கால்வாய்கள் வழியாக பெரும்பேடு, தத்தமஞ்சி, காட்டூர், வேலுார் ஆகிய ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக, ஆறு ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
லட்சுமிபுரம் அணைக்கட்டு வளாகம் முழுதும் பராமரிப்பு இன்றி உள்ளது. இங்குள்ள ஷட்டர்கள் அமைந்துள்ள கான்கிரீட் கட்டுமானங்களில் செடிகள் வளர்ந்து உள்ளன. கால்வாய் மற்றும் சரிவுப்பகுதிகளிலும் முள்செடிகள் வளர்ந்து, கட்டுமானங்கள் சிதைத்து வருகின்றன.
பார்வையாளர் மாடம் பகுதியில் உள்ள இரும்பு தளம் துருப்பிடித்து, ஓட்டை உடைசலுடன் உள்ளது. ஒரு மாதத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், லட்சுமிபுரம் அணைக்கட்டு பகுதி பராமரிப்பு இன்றி இருப்பது, விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, நீர்வளத்துறையினர் பருவ மழைக்கு முன், அணைக்கட்டு வளாகத்தை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.